பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு: கணக்கில் வராத ரூ.2.54 லட்சம் பறிமுதல்

Added : டிச 19, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில், கணக்கில் வராத, 2 லட்சத்து, 54 ஆயிரத்து, 40 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி அருகே, பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து சோதனைச்சாவடி (உள்வழி) உள்ளது. இங்கு, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு மற்றும் அதிக பாரம் ஏற்றி

ஓசூர்: ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில், கணக்கில் வராத, 2 லட்சத்து, 54 ஆயிரத்து, 40 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி அருகே, பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து சோதனைச்சாவடி (உள்வழி) உள்ளது. இங்கு, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தற்காலிக அனுமதி சீட்டு வழங்கும் போது, குறிப்பிட்ட கட்டணத்தை விட, வாகன டிரைவர்களிடம் இருந்து கூடுதல் பணம் வசூல் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த அக்டோபர், 16 இரவு, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத, 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 120 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று அதிகாலை, 4:00 முதல் காலை, 8:00 மணி வரை, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், போக்குவரத்து சோதனைச்சாவடியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத, 2 லட்சத்து, 54 ஆயிரத்து, 40 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சோதனைச்சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த மாதம், 27ல், சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 698 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல் கடந்த, 12 ல், ஓசூர் ஜூஜூவாடி வெளிவழி சோதனைச்சாவடி மற்றும் பாகலூர் சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் சோதனை செய்து, 2 லட்சத்து, 10 ஆயிரத்து, 20 ரூபாயை கைப்பற்றினர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர் சோதனையால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X