நாமக்கல்: நாமக்கல் தாய் விழுதுகள் அறக்கட்டளை மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக, நாமக்கல்-பரமத்தி சாலையில் செயல்படும், அசோக் லேலண்ட் பயிற்சி மையம் ஓட்டுனர் பயிற்சி அளிக்க முன் வந்தது. முதல் கட்டமாக, 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இலகு ரக வாகனம், கனரக வாகனம் ஆகியவை இயக்குவதற்கான பயிற்சி நேற்று முன்தினம் துவங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுரேஷ்பாபு, கிறிஸ்துதாஸ் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி முடித்தவுடன் டிரைவிங் லைசன்ஸ் பெற்று கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என, பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE