நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மனநல திட்டம் சார்பில், கொல்லிமலை அரசு மருத்துவமனையில், மனநல வியாழன் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் முகிலரசி பேசியதாவது: பேய், பில்லி, சூனியம், செய்வினை, ஏவல், கெட்ட நட்சத்திரம் போன்றவற்றால் மன நோய் வருகிறது என்பது மூடநம்பிக்கை. மனநோய் தொற்று வியாதி அல்ல. பெரும்பாலான மனநோய்கள் பூரணமாகக் குணப்படுத்தக் கூடியவையே. மனநல பாதிப்புகள் மிதமான மனநோய், தீவிரமான நோய் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குடி மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் மனநோயே. மன நோய்கள், மருந்துகள் மூலமாகவும் உளவியல் ரீதியான சிகிச்சைகள் மூலமாகவும் குணப்படுத்தப்படுகின்றன. ஐந்து நபர்களில் ஒருவருக்கு மன நோய் உள்ளது. இருதய நோய்க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மனநோய் உள்ளது. இவர்கள் மனநலமருத்துவர் உதவியின் மூலம் பழக்கத்திலிருந்து மீள வாய்ப்பு உண்டு. இவ்வாறு, அவர் பேசினார். மனநல ஆலோசகர் ரமேஷ், மருத்துவர்கள் இந்துமதி, ஜீவிதா ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE