பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளி சிறப்பு முகாம்: அடையாள அட்டை வழங்கல்

Added : டிச 19, 2020
Share
Advertisement
ராசிபுரம்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சியில் சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி முகாமை துவக்கி வைத்தார். எலும்பு முறிவு மருத்துவர் மணிகண்டன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குணசீலன் ஆகியோர் அடங்கிய குழுவினர், முகாமில் கலந்து கொண்டவர்களை பரிசோதனை

ராசிபுரம்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சியில் சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி முகாமை துவக்கி வைத்தார். எலும்பு முறிவு மருத்துவர் மணிகண்டன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குணசீலன் ஆகியோர் அடங்கிய குழுவினர், முகாமில் கலந்து கொண்டவர்களை பரிசோதனை செய்தனர். அதில், வடுகம், பட்டணம் ஊராட்சிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில், 18 பேருக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், இரண்டு பேருக்கு, மடக்கு சக்கர நாற்காலி, இரண்டு பேருக்கு, முழங்கை ஊன்றுகோல், 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. தொன்போஸ்கோ அன்பு இல்ல தலைவர் சேவியர், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X