பொது செய்தி

தமிழ்நாடு

சவலை குழந்தை ஸ்டாலின்: தி.மு.க., 'மாஜி' எம்.பி., விமர்சனம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
ராசிபுரம்: இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவரும், தி.மு.க., முன்னாள் எம்.பி.,யுமான ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி, கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த வேளாண் குறித்தான சட்டங்களை திருத்துவதற்கான விதையை விதைத்ததே காங்கிரஸ் தானே. காரணகர்த்தாவாக இருந்த காங்கிரஸை சுட்டி காட்டாமல், பா.ஜ., மோடி என்று

ராசிபுரம்: இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவரும், தி.மு.க., முன்னாள் எம்.பி.,யுமான ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி, கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த வேளாண் குறித்தான சட்டங்களை திருத்துவதற்கான விதையை விதைத்ததே காங்கிரஸ் தானே. காரணகர்த்தாவாக இருந்த காங்கிரஸை சுட்டி காட்டாமல், பா.ஜ., மோடி என்று பேசுவதிலிருந்தே தெரிகிறது, இது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்கு மட்டுமே. நானும், தி.மு.க., விவசாய அணியில் பொறுப்பில் இருந்தவன்தான். விவசாயிகள் போராட்டத்தில், தி.மு.க., ஆட்சியில் முதன் முதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, நான், தி.மு.க.,வில் இல்லை. தி.மு.க.,விற்காக நான் மாறுபடவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து பலமுறை, 1970களிலேயே சுட்டிக் காட்டியுள்ளேன். அன்றைக்கு விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு இன்றைக்கு விவசாயிகளுக்காக போராடுகிறேன் என்று போலியான பசப்பான வார்த்தைகளை பேசும் ஸ்டாலினுக்கு என்ன நேர்மை இருக்கிறது. ஸ்டாலின் ஒரு சவலை குழந்தைதான். புரிதலும் கிடையாது, அனுபவமும் கிடையாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X