நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள, தகுதி வாய்ந்த பணியாளர்களை, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணி தேர்வு முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பணி தேர்வு முகமை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற உள்ள பணியாளர், பயிர் அறுவடை பரிசோதனை தளைகளின் தேர்வு பணி, அறுவடைப்பணி மற்றும் அதனை சார்ந்த பணிகளை மேற்கொள்ள, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புடன் கணினி இயக்கம் திறன் பெற்றிருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், 13 இடங்கள், தற்காலிக பணியாளர்களுக்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள, பதிவுத்துறையின் மூலம் பதிவு செய்து உள்ளூரில் செயல்பட்டு வரும் தகுதி வாய்ந்த பணிநியமன முகமை, பணியாளர்களை தேர்வு செய்து வழங்க, தங்கள் விபரங்களை, 'வேளாண் இணை இயக்குனர், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல், 637 003'. என்ற முகவரிக்கு, வரும், 21 மாலை, 5:00 மணிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். மேலும், jdagr.tnnmk@nic.in என்ற முகவரியிலும் அனுப்பலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE