சாலையில் வீணாகும் காவிரி நீர்; மக்கள் அதிருப்தி

Added : டிச 19, 2020
Share
Advertisement
மோகனூர்: கூட்டு குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர், சாலையில் வெளியேறி வீணாவதை தடுக்க, அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். அதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோகனூர் அடுத்த ஒருவந்தூர் காவிரி ஆற்றில் இருந்து, பட்டணம்-சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம்

மோகனூர்: கூட்டு குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர், சாலையில் வெளியேறி வீணாவதை தடுக்க, அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். அதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோகனூர் அடுத்த ஒருவந்தூர் காவிரி ஆற்றில் இருந்து, பட்டணம்-சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், மூன்று பேரூராட்சிகள், 25 கிராம ஊராட்சிகளுக்களுக்கும், இத்திட்டத்தின் மூலம், தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மோகனூர் அடுத்த வளையப்பட்டியில், ஏர்வால்வு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏர் வால்வில், தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. அவ்வாறு வெளியேறும் தண்ணீர், சாலையை கடந்து, விவசாய நிலங்களில் பாய்ந்து வீணாகிறது. கடந்த, சில மாதங்களாக, வெளியேறும் தண்ணீரால், பல கோடி லிட்டர் தண்ணீர் வீணாகி உள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, பலமுறை புகார் தெரிவித்தும், அவற்றை சரி செய்வதற்கு, இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 'காவிரி குடிநீர் சாலை மற்றும் விவசாய நிலங்களில் வெளியேறி வீணாவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினருக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X