கரூர்: சனி பெயர்ச்சியையொட்டி வரும், 24ல் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை துவங்குகிறது. வரும், 27 அதிகாலை, 5:22 மணிக்கு, சனிபகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதையொட்டி வரும், 24ல் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், காலை, 8:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன், லட்சார்ச்சனை, நவக்கிர அபி?ஷகம் துவங்கி வரும், 26 வரை நடக்கிறது. அதை தொடர்ந்து, 27 அதிகாலை, 3:00 மணிக்கு நவக்கிரக மூர்த்திக்கும், சனீஸ்வர பகவானுக்கும் மூலமந்திர யாகம், அஸ்திரேஹாமம், மகா அபி?ஷகம் மற்றும் கலாபி?ஷகம் நடக்கிறது. பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. லட்சார்ச்சனையில், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE