கரூர்: ரயில்வே ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் சேலம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் வரும், 30ல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, ரயில்வே வாரியம் அறிவுரைப்படி, ரயில்வே ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் (பென்ஷன் அதாலத்) வரும், 30ல் வீடியோ கான்பரஸ் மூலம் நடத்தப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்கள், பொன்மலை, பெரம்பூர் ஆகிய இடங்களில் பணிமனைகளிலும் நடக்கிறது. வீடியோ கான்பரன்ஸ் முறையில், ஓய்வூதியர்கள் பங்கேற்கும் முறை தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவிக்கும். ரயில்வே ஓய்வூதியர்கள், தெற்கு ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தபால் அல்லது இ-மெயிலில் அனுப்பி வைக்கலாம். விபரங்களை, www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE