கரூர்: தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், மழை நீர் சேகரிப்பு தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. அதை கண்டு கொள்ளாமல், யூனியன் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். கடந்த, 2001-06ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் தண்ணீர் வசதிக்காக, போர்வெல் அமைக்கப்பட்டது. தற்போது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சேதமடைந்து, செடிகள், முட்கள் அதிகளவில் முளைத்துள்ளன. போர்வெல் குழாயும் பழுதடைந்துள்ளது. கடந்த, ஒரு மாதமாக சுற்று வட்டார பகுதிகளில், பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சரி செய்யும் பட்சத்தில், போர்வெல் குழாயில் தண்ணீர் வர வாய்ப்புண்டு. சேதமடைந்துள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE