சென்னை: ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:சிறிய வணிகர்கள், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த, க்யூ.ஆர்.எம்.பி., என்ற, 'காலாண்டு கணக்கு தாக்கல்; மாதாந்திர வரி செலுத்துதல்' திட்டம், சமீபத்தில் அறிமுகமானது. இத்திட்டம், 2021 ஜனவரி, 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வரை, வருவாய் ஈட்டும் வணிகர்கள், மாதம்தோறும் வரி செலுத்தி விட்டு, மூன்று மாத்திற்கு, ஒரு முறை கணக்கு சமர்ப்பிக்கலாம். முந்தைய மாதம் செலுத்திய வரி தொகையையே, அடுத்த மாதமும் செலுத்தலாம்; மூன்றாவது மாதத்தில், கணக்கிடப்படும் மொத்த வரித்தொகையை செலுத்த வேண்டும்.மேலும், 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் ஈட்டும் வணிகர்கள், மாதம்தோறும் கணக்கு தாக்கலுடன், வரி செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE