சென்னை: தமிழகத்தில், 320 வனக் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதன்பின், சான்றிதழ் சரிபார்த்தல், உடல் திறன் தகுதி தேர்வுகள், ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டன.ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்படும் நிலையில், டிச., 5, 6, 7ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. மேலும், டிச., 8ல் உடல் திறன் தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டது.உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததால், இது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜன., 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் சான்றிதழ் சரிபார்த்தல் நடக்கும். உடல் திறன் தேர்வு, ஜன., 19ல், வண்டலுார் உயிரியல் பூங்கா வளாகத்தில் நடக்கும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE