சகதி ரோட்டில் இறுதி ஊர்வலம் : சிரமத்தில் கிராம மக்கள்

Added : டிச 19, 2020
Share
Advertisement
திருச்சுழி: திருச்சுழி அருகே மயானம் செல்லும் ரோடு சகதியாக உள்ளதால் இறந்தவர்கள் உடல்களை கொண்டு செல்வதில் கிராமத்தினர் பாதிக்கின்றனர்.திருச்சுழி அருகே பரளச்சி வடக்குநத்தத்தில் ஊராட்சி ஒன்றிய மயானம் செல்லும் 1 கி.மீ., துாரம் ரோடு பள்ளம் மேடாக உள்ளது. பல ஆண்டுகளாக உள்ள இந்த ரோடு மழைகாலங்களில் சகதியாக மாறி விடுகிறது. இறந்தவர்கள் உடல்களை கொண்டு செல்வதில் மிகவும்

திருச்சுழி: திருச்சுழி அருகே மயானம் செல்லும் ரோடு சகதியாக உள்ளதால் இறந்தவர்கள் உடல்களை கொண்டு செல்வதில் கிராமத்தினர் பாதிக்கின்றனர்.
திருச்சுழி அருகே பரளச்சி வடக்குநத்தத்தில் ஊராட்சி ஒன்றிய மயானம் செல்லும் 1 கி.மீ., துாரம் ரோடு பள்ளம் மேடாக உள்ளது. பல ஆண்டுகளாக உள்ள இந்த ரோடு மழைகாலங்களில் சகதியாக மாறி விடுகிறது. இறந்தவர்கள் உடல்களை கொண்டு செல்வதில் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. சகதியில் நடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மயானத்திலும் மின் விளக்கு, ரோடு, அடி குழாய் போன்ற எந்த வசதியும் இல்லை. இறுதி சடங்கு சென்ற பின் குளிக்க தண்ணீரையும் குடங்களில் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.இதன் மீது திருச்சுழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X