பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் அடித்து வரப்பட்ட சுவாமி சிலைகள் மீட்பு

Added : டிச 19, 2020
Share
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, பாலாற்றில் அடித்து வரப்பட்ட சுவாமி சிலைகளை, பொதுமக்கள் மீட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே, ராமநாயக்கன்பேட்டை பாலாற்றில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு அப்பகுதி பெண்கள், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் அடித்து வரப்பட்ட இரண்டு சிலைகளை, பொதுமக்கள் மீட்டு, ராமநாயக்கன்பேட்டை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, பாலாற்றில் அடித்து வரப்பட்ட சுவாமி சிலைகளை, பொதுமக்கள் மீட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே, ராமநாயக்கன்பேட்டை பாலாற்றில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு அப்பகுதி பெண்கள், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் அடித்து வரப்பட்ட இரண்டு சிலைகளை, பொதுமக்கள் மீட்டு, ராமநாயக்கன்பேட்டை வி.ஏ.ஓ., பரிமளா மூலம், வாணியம்பாடி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில்,' 50 ஆண்டுகள் பழமையான வீர அனுமன், அம்மன் சுவாமி கற்சிலைகள் என்றும், அவை எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X