விருதுநகர்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ஹசன் அலி தலைமை வகித்தார். செயலாளர் ரஜினிகாந்த் வரவேற்றார். துணை செயலாளர் சைலஜா, மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட பிரதிநிதி வீரகஞ்சையன், மாநில துணை தலைவர் சூரியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி பேசினர். வட்ட பொருளாளர் ஹென்றி அருள்தாஸ் நன்றி கூறினார்.
சாத்துார்:வெம்பக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார் . வட்டார தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.பொருளாளர் கனகராஜ் நன்றி கூறினார்.
திருச்சுழி : திருச்சுழி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கவுரவ தலைவர் செல்லம் தலைமை வகித்தார். வட்ட தலைவர் வினோத், துணைத் தலைவர்கள் பிரியா, செல்வலட்சுமி முன்னிலை வகித்தனர். வட்ட செயலர் அழகுராணி வரவேற்றார். வட்ட துணை செயலர்கள் லட்சுமணன், கிருஷ்ணவேணி, மாவட்ட பிரதிநிதிகள் மணிசேகரன், புத்திசிகாமணி, மாவட்ட இணைச் செயலர் கற்பகம் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமாட்சி பேசினர். மாவட்ட துணைத்தலைவர் பரமன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE