அடிலெய்டில் இந்தியா தோல்வி: 36 ரன்னில் சிதறிய பேட்டிங்

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், 36 ரன்னுக்கு சுருண்டது இந்தியா. ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 244, ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்தன. 53 ரன்கள்
INDvsAUSTest, Sehwag, Saha,Team India, Kohli

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், 36 ரன்னுக்கு சுருண்டது இந்தியா. ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 244, ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்தன. 53 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மயங்க் அகர்வால் (5), 'நைட் வாட்ச்மேன்' பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news




விக்கெட் சரிவு

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் மயங்க் அகர்வால் ஒரு பவுண்டரி அடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். மறுபக்கம் கம்மின்ஸ் பந்தில் பும்ரா 2 ரன் எடுத்தார். அவ்வளவு தான் இதன் பின் திடீரென ஆஸி., 'வேகங்கள்' புயலாக பந்து வீசினர். முதலில் பும்ரா (2) நடையை கட்டினார். புஜாரா 'டக்' அவுட்டானார். மறுபக்கம் முதல் ஓவரை வீசிய ஹேசல்வுட், மயங்க் அகர்வால் (9), ரகானேவை (0) அவுட்டாக்கினார்.

கோஹ்லி, ஹனுமா விஹாரி இணைந்தனர். கிரீனின் சூப்பர் கேட்சில் கோஹ்லி (5) வெளியேறினார். சகா (4). அஷ்வின் (0), ஹனுமா விஹாரி (8) நீடிக்கவில்லை. ஷமி (1) காயத்தால் வெளியேறினார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்தது.


latest tamil news



எளிய இலக்கு

அடுத்து இரண்டாவது இன்னிங்சில் 90 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. மாத்யூ வேட், பர்ன்ஸ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. வேட் (33) ரன் அவுட்டானார். லபுசேன் 6 ரன் எடுத்தார்.ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்ன்ஸ் (51), ஸ்மித் (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், டிச. 26ல் மெல்போர்னில் துவங்குகிறது


மோசமான ஸ்கோர்


அடிலெய்டு டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் குறைந்த ரன்னுக்கு சுருண்டது இது தான் முதன் முறை. இதற்கு முன் 1974ல் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 42 ரன்னுக்கு சுருண்டது.


latest tamil news




இப்படி சொதப்பினா எப்படி

இரண்டாவது நாள் முடிவில் 62 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட்டுகள் இந்திய அணியிடம் மீதமிருந்தன. இரண்டாவது இன்னிங்சில் குறைந்தது 200 ரன்கள் எடுத்தால் கூட, ஆஸ்திரேலிய அணிக்கு 250க்கும் மேல் இலக்கு நிர்ணயித்து சவால் கொடுத்திருக்கலாம். ஆனால் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், வரிசையாக அவுட்டாகி, டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா. கடைசியில் ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றியை தாரை வார்த்துக் கொடுத்தது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
19-டிச-202022:03:22 IST Report Abuse
siriyaar ஜபில் மாதிரி ஸகிரிப்பட் படி பந்து போடும் முறையை ஆஸ்திரேலிய வீரர்கள் மீறிவிட்டனர். இந்திய அணி கிரிக்கெட் நடிகர்கள் வீரர்கள் ஜபில்லில் நடிக்க முடியாது.
Rate this:
Cancel
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
19-டிச-202021:20:32 IST Report Abuse
RAVINDRAN.G நம்ம தலை கேதார் யாதவ் மட்டும் இருந்திருந்தால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து மீதும் கட்டை போட்டு கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து போட்டியை டிரா செய்து இருப்பார். விவரம் தெரியாத ஐடியா இல்லாத கிரிக்கெட் வாரியம்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-டிச-202021:13:28 IST Report Abuse
Rajagopal ஆஸ்திரேலியாவில் இப்படி முதல் மேட்சிலேயே பலத்த அடி வாங்கினால் அதிலிருந்து மீளுவது மிகவும் கடினம். இப்படி வீழ்ந்த அணிகள் மன அளவில் பாதிக்கப்பட்டு எல்லா மேட்சுகளையும் வரிசையாகத் தோற்று விடுவது மரபு. எப்போதடா இந்த தண்டனை முடியும், ஊருக்குத் திரும்பி மீண்டும் முதலிலிருந்து எல்லாவற்றையும் தொடங்கலாம் என்ற ஏக்கம் உண்டாகும். பல கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் மறந்து இனிமேல் ஆண்மை இழந்த மனா நிலைக்கு ஆளாகி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் நிலையம் உண்டாகும். ஒரு முறை இந்த மாதிரி மரண அடி கொடுத்து விட்டால், ஆஸ்திரேலியர்கள் வாலியை மாதிரி அசுர பலம் பெற்று, எதிரி அணியின் எல்லா பலத்தையும் உறிஞ்சி விடுவார்கள். ரத்தமே இல்லாமல் வெளுத்துப்போய் பல அணிகள் இந்த மாதிரி ஊர் திரும்பியிருக்கின்றன. இப்போது கோலியும் ஊர் திரும்புகிறார். பேசாமல் டீவீயை அனைத்து விடுங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். இந்திய அணியை சாக்கு மூட்டைக்குள் அடைத்து எல்லா பக்கத்திலிருந்தும் உதைப்பதை பார்க்கும் அவலம் யாருக்கும் வேண்டாம். இனிமேல் பாதி முடியை சிரைத்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுத்தை மேல் ஊர்வலம் போக வைக்கப் போகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X