பொது செய்தி

இந்தியா

ராகுல் காங்., தலைவராக வேண்டும் - டிரெண்டிங்கில் பா.ஜ., விருப்பம்

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement
புதுடில்லி : காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த ரன்தீப் சுர்ஜிவாலா, 99.9 சதவீத தொண்டர்கள் ராகுலையே தலைவராக வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். இதை அக்கட்சியினர் ஆதரிக்கிறார்களோ இல்லையோ, பா.ஜ.,வினர் 100 சதவீதம் ஆதரிப்பதாக கூறி டிரெண்ட் செய்கின்றனர்.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் இரண்டாவது
RahulGandhi, Rahul, Congress, BJP, RandeepSurjewala,

புதுடில்லி : காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த ரன்தீப் சுர்ஜிவாலா, 99.9 சதவீத தொண்டர்கள் ராகுலையே தலைவராக வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். இதை அக்கட்சியினர் ஆதரிக்கிறார்களோ இல்லையோ, பா.ஜ.,வினர் 100 சதவீதம் ஆதரிப்பதாக கூறி டிரெண்ட் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் இரண்டாவது முறையாக படுதோல்வியடைந்ததையடுத்து, கட்சியில் தலைமைக்கு எதிராக, மூத்த தலைவர்கள் பலர் போர்க்கொடி துாக்கினர். மேலும் லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்த பல மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களிலும், காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், கட்சியில் தலைமைக்கு எதிரான குரல் அதிகரித்தது. சரியான தலைமை வேண்டும் என குரல்கள் எழுந்தன.


latest tamil news




ஜனவரியில் புதிய தலைவரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. கட்சியின் தலைவராக ராகுலை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சோனியா விரும்புகிறார். ஆனால் இதை அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலரும் விரும்பவில்லை. இதனால் அக்கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் அதிருப்தி தலைவர்களை சமரசம் செய்யும் முயற்சியிலும் சோனியா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் முதல் கட்டமாக, டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. சோனியா தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சுர்ஜிவாலா, 99.9 சதவீதம் தொண்டர்கள் தலைவராக ராகுல் தான் வர வேண்டும் என விரும்புவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதை அக்கட்சியினர் பலர் வரவேற்றாலும், சிலர் விருப்பம் இல்லாத மனநிலையில் தான் உள்ளனர். அதேசமயம் ராகுல் தலைவராக வேண்டும் பா.ஜ.,வினரே கூறி வருவது போன்று டிரெண்ட் செய்கின்றனர்.


latest tamil news




சமூகவலைதளமான டுவிட்டவில் #RahulGandhi என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. என்னவென்று பார்த்தால் அதில் ரன்தீப் சுர்ஜிவாலா கூறிய விஷயம் தான் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அவரின் கருத்தை சிலர் ஆதரித்து கருத்து பதிவிட்டுள்ளனர். ஆனால் பலரும் எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ''ராகுல் நல்ல மனிதர் தான், ஆனால் தலைமை பொறுப்புக்கு அவர் சரிப்பட மாட்டார், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அவரை நியமிக்க வேண்டாம்'' என்ற கருத்து பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதை விட பெரும்பாலான கருத்துக்கள் இப்படி உள்ளன. அதாவது ராகுல் தலைவராக வேண்டும் என பா.ஜ.வினரே கூறுவது போன்று கருத்து பதிவிட்டு டிரெண்ட் செய்கின்றனர். ''99.9 சதவீதம் இல்லை, ராகுல் தலைவராக பா.ஜ., 100 சதவீதம் ஆதரிக்கிறது'', ''இது காங்கிரஸிற்கு மகிழ்ச்சி செய்தியோ இல்லையோ... பா.ஜ.,விற்கு 100 சதவீதம் மகிழ்ச்சியான செய்தி'' என பலரும் கருத்து பதிவிட்டு மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஒருவர், ''ராகுலை நிரந்தர தலைவராக்குங்கள் அப்போது தான் நாட்டிற்கு நல்லது'' என நக்கலாக பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ''0.01 சதவீதம் பேர் மட்டுமே உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள்'' என பதிவிட்டுள்ளனர். மற்றொருவர், ''0.01 சதவீதம் விரும்பாத நபர் ராகுல்'' தான்என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
20-டிச-202008:13:39 IST Report Abuse
KALIHT LURA ஐம்பது வயதில் அம்மா பின்னால் சென்று கொண்டிருக்கிறார். முதுபெரும் அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பை எடுத்துக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர். பாவம் காங்கிரஸ் .ட்விட்டரில் அரசியல் பண்ண முடியாது.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
20-டிச-202008:07:32 IST Report Abuse
Nagarajan D இதை விட கேவலம் வேறு இருக்க முடியுமா? காங்கிரஸ் அடிமைகளே... இவனையும் இவன் குடும்பத்தையும் தூக்கி வெளியே போடும் வரை நீங்கள் வெற்றியை காகிதத்தில் எழுதி தான் பார்க்க வேண்டும்.....
Rate this:
Cancel
20-டிச-202006:54:22 IST Report Abuse
ravi chandran சீக்கிரம் தலைவர் ஆக்குங்கள் காங்கிரஸுக்கு இல்லாவிட்டாலும் பிஜேபிக்கு வேண்டி பண்ணுங்க. வாயித்துல பால் வாத்தீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X