* காஷ்மீரின் ஸ்ரீநகரில் இர்பான் அகம்மது ஷோபி கடந்த வாரம் காணாமல் போனார். போலீசார் விசாரித்ததில் இந்த இளைஞர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.'போலீசார் இவரது குடும்பத்தினரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

* தெற்கு கேரளாவின் கிளுவிளம் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை .
* கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியின் பந்தளம் அருகே கணவன் மதுசூதனன் மனைவியை கொன்று புதைத்தார். இதனையடுத்து அவர் கைது. இருவருக்கு இடையே பணத்தகராறு இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
தமிழக நிகழ்வு !
* வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் ஒருவர் பலியானார்.
* நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வசந்தி என்பவரின் ரூ. 3 கோடி மதிப்பு உள்ள சொத்தை அபகரிக்க முயற்சித்த கீழையூர் திமுக ஒன்றிய செயலர் தாமஸ் ஆல்வா எடிசன் கைது .
* ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்து தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
* சென்னை அருகே சின்ன நீலாங்கரை மேட்டுக்காலனியை சேர்ந்த ஹரி என்பவர் மனைவி மீது சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொன்று சரண் அடைந்தார். இவரது இரு குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கிறது.

* கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டூர் கிராமத்தில் ராஜப்பா என்பவரை மர்ம கும்பல் மிளகாய் பொடி தூவி வெட்டி கொன்றது. போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
உலக நடப்பு !
* அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ்அயர்ஸ் நகரில் ஊதியம் கேட்ட ஊழியர் ஒருவரை பீட்சா கடை உரிமையாளர் கொன்று புதைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE