திரிணமுல்லுக்கு ‛முழுக்கு': பா.ஜ.,வில் இணைந்த 10 எம்.எல்.ஏ.,க்கள்

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (35+ 7)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகிய, அக்கட்சி மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பேசிய அமித்ஷா, 2021 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் எனவும், தேர்தல் நெருங்கும்
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி, amitshah, அமித்ஷா

கோல்கட்டா: மே.வங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகிய, அக்கட்சி மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பேசிய அமித்ஷா, 2021 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் எனவும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா மட்டும் தனித்துவிடப்படுவார் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரசில் இருந்து, மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் விலகி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

கோல்கட்டா சென்ற அமித்ஷா, ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர், சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் நமக்கு காட்டிய உன்னதமான வழியில் நடப்போம் என தெரிவித்தார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர் குடிராம் போஸன் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்திய அவர், அவரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.

இதன் மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில், அமித்ஷா, பா.ஜ., பொது செயலர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ் மதிய உணவை சாப்பிட்டனர்.


பா.ஜ.,வில் திரிணமுல் தலைவர்


திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுவேந்து அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகுவதாக, மம்தாவுக்கு கடிதம் அனுப்பினார். அவர் எம்.எல்.ஏ., பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். திரிணமுல்லில் இருந்து விலகிய அவருக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.


latest tamil newsஇந்நிலையில், மிட்னாப்பூரில் அமித்ஷா தலைமையில் இன்று(டிச.,19) நடந்த கூட்டத்தில், சுவேந்து அதிகாரி, தபாசி மொண்டல், அசோகி திண்டா, சுதிப் முகர்ஜி, சாய்காட் பஞ்சா, ஷில்பத்ரா தத்தா, திபாலி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, ஷியாமபதா முகர்ஜி, பிஸ்வஜித் குண்டு, பனஸ்ரீ மைடி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் ஒரு எம்.பி., மற்றும் முன்னாள் எம்.பி., ஒருவர் பா.ஜ.,வில் இணைந்தனர்.


வன்முறை தலைவிரித்தாடுகிறது


இதனை தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது: மேற்கு வங்க மக்களின் எதிர்காலத்துடன் மம்தா விளையாடுகிறார். மாநிலத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும். மேற்கு வங்கத்திற்கு பிரதமர் அறிவித்த திட்டங்களை மம்தா தடுக்கிறார். 2020 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மம்தா ஆட்சியில், மாநிலத்தில் வளர்ச்சி ஏதும் நடைபெறவில்லை. ஊழல், வன்முறை தலைவிரித்தாடுகிறது. மாநில அரசின் தவறான நிர்வாகத்தால், ஏழை மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கு மம்தா வெட்கப்பட வேண்டும்.


latest tamil news
வரும் சட்டசபை தேர்தலில், மக்கள் திரிணமுல்லை வேரோடு சாய்ப்பார்கள். திரிணமுல் குண்டர்கள் ஏவிய வன்முறையை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம். நீங்கள் தூண்டிவிடும் வன்முறை எங்களை தான் பலப்படுத்தும். மே.வங்கத்தில் பாஜ., தொண்டர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. மாநிலத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படுத்துவோம். மேற்கு வங்கம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த முறை பா.ஜ.,விற்கு வழங்கும். மம்தா தலைமையில் தவறான ஆட்சி நடக்கிறது. மக்கள், மம்தாவுக்கு எதிராக உள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா தனித்து விடப்படுவார். தனது உறவினரை முதல்வராக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (35+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
20-டிச-202001:49:53 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran naatiga katchigalai ozhiththal than tamizh nadu munnera mudiyum.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
19-டிச-202022:20:40 IST Report Abuse
J.Isaac சங்கேஸ்வரன் அவர்களே யாருக்கும் சங்கு ஊதுவது நம் கையில் இல்லை
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-டிச-202021:25:02 IST Report Abuse
Rajagopal தோற்றால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற பயத்தால் கேடிகள் வங்காள தீமூக்காவை (திருநா மூல காங்கிரஸ்) விட்டு பாஜகவில் நுழைகிறார்கள். அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படலாம். அப்போது இழப்பு பாஜகவிற்குத்தான் ஏற்படும். இதை அறிந்து செயல் பட வேண்டும். வருவதையெல்லாம் சேர்த்துக்கொள்வோம் என்று கூட்டம் சேர்த்தால் அது நிலையான எதிர்காலத்தை பாஜகவிற்கு அளிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X