வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலகில் 40-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம்கட்ட சோதனை நிலையில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தும் மாடர்னா தடுப்பு மருந்தும் தற்போது உலகப்புகழ் பெற்று வருகின்றன. ஆசிய நாடுகள் பலவற்றுக்கு இந்த தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தடுப்பு மருந்துகளுக்குள் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
பைசர், மாடர்னா ஆகிய தடுப்புமருந்துகளுமே எம்-ஆர்என்ஏ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. உடலில் உள்ள உயிரிகளை கொரோனா வைரஸில் உள்ள புரதம் போன்ற ஓர் புரதத்தை தயாரிக்க இந்த எம்-ஆர்என்ஏ உந்தித்தள்ளுகிறது. இதன்மூலமாக கொரோனா வைரஸ் புரதத்தை படிப்படியாக அழித்து நுரையீரலை தூய்மைப்படுத்துகிறது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 95 சதவீத பலன் அளிக்கும் நிலையில் மடர்னா தடுப்பு மருந்து 94% பலன் அளிக்கிறது.

பைசர் தடுப்பு மருந்துக்கு இரண்டு டோஸ்கள் தேவைப்படுகின்றன. ஒரு டோஸ் தடுப்பு மருந்தை நோயாளியின் உடலில் செலுத்தி 21 நாட்கள் கழித்து மற்றொரு டோஸை செலுத்த வேண்டும்.
மாடர்னா தடுப்புமருந்துக்கும் இரண்டு டோஸ்கள் தேவைப்படுகின்றன. ஒரு டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தி 28 நாட்கள் கழித்து அடுத்த டோஸை செலுத்தவேண்டும்.
பைசர் தடுப்பு மருந்தின் உள்ள ஓர் முக்கிய பின்னடைவு இந்த தடுப்பு மருந்து குப்பிகளை -70 டிகிரி காலநிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் மாடர்னா தடுப்பு மருந்தை மைனஸ் 20 டிகிரி காலநிலையில் வைத்து இருந்தாலே போதுமானது. பைசர் தடுப்புமருந்து 5 நாட்கள்வரை மட்டுமே கெடாமல் இருக்கும். ஆனால் மாடர்னா தடுப்பு மருந்து 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
இரண்டு தடுப்பு மருந்துகளும் தீவிரமான பக்கவிளைவுகளை அளிக்க வாய்ப்பில்லை. ஆனால் அவ்வப்போது சிறிய பக்கவிளைவுகளை அளிக்க வாய்ப்பு உண்டு.
மாடர்னா தடுப்பு மருந்து இரண்டாவது டோஸ் செலுத்திய பின்னர் மிதமான காய்ச்சல், லேசான தலைவலி உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படுகின்றன.
பைசர் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்ட 2 பிரிட்டன் குடிமக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக முன்னதாக செய்தி வெளியாகியது. ஆகமொத்தம் இரண்டு தடுப்பு மருந்துகளிலும் நிறை மற்றும் குறைகள் உள்ளதை மறுக்க முடியாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE