இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டம் தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் தோமர், எழுதிய கடிதத்தை படிக்குமாறு, பிரதமர் மோடி, தமிழில் டுவிட் செய்துள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டில்லி எல்லையில், கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு
FarmLaw, Pmmodi, narendramodi, twitter,

புதுடில்லி: வேளாண் சட்டம் தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் தோமர், எழுதிய கடிதத்தை படிக்குமாறு, பிரதமர் மோடி, தமிழில் டுவிட் செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டில்லி எல்லையில், கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவசாய சட்டம் தொடர்பாக, விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 8 பக்க கடிதம் ஒன்றை எழுதி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது: நான் ஒரு விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்தே, விவசாயிகளின் கடினமான வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன். புதிய சட்டங்களை அமல்படுத்திய பின்னர், நாடு முழுவதும் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். சில மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை இருக்காது என அரசியல் காரணங்களுக்காக பொய்யுரை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை மாறப்போவதில்லை. வேளாண்துறையில் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமிடும் விதத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த சட்டங்கள், கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் விவசாயிகளை செயல்பட வைக்கும். கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி அரசு விவசாயிகளுக்காக நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை எங்கு வேண்டுமானாலும் விற்க அரசு, கூடுதல் வாய்ப்பை வழங்கியுள்ளது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வெளியிட்ட பதிவு: வேளாண் துறை அமைச்சர் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், தோமர் தமிழில் எழுதிய கடிதத்தின் நகலையும் அதில் இணைத்துள்ளார்


பிரதமரின் டுவிட்:





Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
20-டிச-202013:35:57 IST Report Abuse
Nallavan Nallavan நாங்கள் ஆரிய மோதியை நம்பமாட்டோம் ............. நம்பி நாங்கள் மோசம் போனாலும் எங்கள் திராவிட நரிகள் நம்பப்படுவதற்கு எங்களுக்கு போதுமானவை ..........
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-டிச-202000:02:28 IST Report Abuse
தமிழவேல் இங்கே யார் ஆரியனை பத்தி பேசினார்கள் ? எதுக்கு ஜாதியை நுழைக்கனும் ?...
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
20-டிச-202011:47:58 IST Report Abuse
pattikkaattaan வேளாண்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழில் வெளியிட வேண்டுகிறேன் .. படித்து புரிந்துகொள்ள எதுவாக இருக்கும் ..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-டிச-202004:11:06 IST Report Abuse
J.V. Iyer போகிற போக்கை பார்த்தால், சுடலையாரைவிட மோடிஜி நன்றாக தமிழ் பேசுகிறார் என்றே தெரிகிறது. வீட்டில் சுடலையார் என்ன மொழி பேசுவார்? கனிமொழி? சுந்தர தெலுங்கு? வங்காளம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X