மார்கழி வழிபாடு
திருப்பாவை - பாடல் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதுாய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதுாயோமாய் வந்து நாம் துாமலர்த் துாவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் துாசாகும் செப்பேலோர் எம்பாவாய்
பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் துாய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் துாய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த துாசு போல காணாமல் போய்விடும்.
திருவெம்பாவை - பாடல் 5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலுாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்றுஓலம் இடினும் உணராய் உணராய்காண்ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
பொருள்: “நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல...இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் 'சிவசிவ' என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற'' என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE