அறிவியல் ஆயிரம்
சிறந்த தானம்
மறைவுக்குப்பின் வாழும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது உடல் உறுப்பு தானம். இதுபற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகளவில் எடுத்துரைக்கப்படுகிறது. கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்றவற்றில் இறந்தவர்களின் உடல் உறுப்புகள் தான் பயன்படுகின்றன. உயிரோடு இருக்கும் போது ரத்த ஓட்டம் காரணமாக உடலுறுப்புகளின் திசுக்கள் பாதிப்படையாமல் இருக்கும். இறந்த பின், மெல்ல மெல்ல திசுக்கள் அழுக ஆரம்பிக்கும். எனவே இறந்தவுடன், சற்று நேரத்திலேயே உடல் உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்கு பொருத்தி விட வேண்டும். அப்போதுதான் உடல் உறுப்பு சிறப்பாக செயல்படும்.
தகவல் சுரங்கம்
ஒற்றுமை தினம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என ஒற்றுமையின் நன்மையை பாடல் மூலம் அறிவுறுத்தியவர் பாரதியார். உலக மக்களிடம் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக 2005 முதல் ஆண்டுதோறும் டிச., 20ல் ஐ.நா., சார்பில் சர்வதேச மனித ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஜாதி, மத மோதல்கள், பயங்கரவாத செயல்களும் அதிகரித்து விட்டன. போர்களினால் மக்கள் அகதிகளாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறது. மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத் தாழ்வுகளை குறைத்து வறுமையை ஒழிப்பதே இத்தினத்தின் நோக்கம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE