பிரான்ஸ் அதிபர் மானுவேல் மேக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து அவர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு மிதமான காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஏற்பட்டுள்ளது. பாரிசுக்கு வெளியே தனது வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களின் அறிவுரைபடி தடுப்பு மருந்தை எடுத்து வருகிறார்.
![]()
|
உலகின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் டொனால்ட் டிரம்ப், போரிஸ் ஜான்சன், இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இது ஐரோப்பிய இதழ்களில் அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். தற்போது பிரான் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிகிச்சை பெற்று வருவது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் வைரலாகியுள்ளது.
முன்னதாக இமானுவேல் மேக்ரான் தனது செல்போனில் ஓர் வீடியோவை பதிவிட்டு சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். தான் நலமுடன் இருப்பதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். இதுவரை பிரான்ஸ் நாட்டில் 60 ஆயிரம்பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பலியாகியுள்ளனர். வைரஸ் மீண்டும் வீரியம் அடைந்து வருவதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
![]()
|
எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை வருவதால் நாட்டுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று 15,274 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வியாழனன்று 18 ஆயிரத்து 254 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்துகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE