திட்டமிடப்படாத ஊரடங்கு!
நாட்டில், ஒரு கோடி பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் கூறுவது போல், இந்த திட்டமிடப்படாத ஊரடங்கு, வைரசை வீழ்த்தவில்லை. அதற்கு பதில், ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை பறித்தது.
ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்.,
அதிக வாய்ப்புள்ளது!
ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, அந்நிய செலாவணி இருப்பு, வர்த்தகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி என அனைத்திலும், பொருளாதாரம், நிலையாக உள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய, அதிக வாய்ப்புள்ளது.
அனுராக் சிங் தாகுர்
மத்திய நிதித் துறை இணை அமைச்சர், பா.ஜ.,
மனக்கசப்பு இல்லை!
காங்., கட்சி, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கு, ஆதரவான கட்சி. அந்த சமூக மக்களுக்காகவே, மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, காங்., தலைவர் சோனியா, கடிதம் எழுதினார். எந்த மனக்கசப்பாலும் அவர் அதை எழுதவில்லை.
பாலாசாகிப் தோரத்
மஹா., மாநில தலைவர், காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE