சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'உரிமையை கடமையாக செய்யணும்!'

Added : டிச 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'உரிமையை கடமையாக செய்யணும்!''சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில், வரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, மக்கள் நீதி மையம் தலைவர் கமல், மதுரையில் சமீபத்தில் துவக்கினார். அங்கு, நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தொழில் முனைவோரை சந்தித்தார். ஆளுங்கட்சிக்கு பயந்து, பெரிய தொழில் முனைவோர் யாரையும் காண முடியவில்லை.தொழில் முனைவோரிடம் பேசிய கமல், 'கமிஷன் ராஜ்ஜியமாக
பக்க வாத்தியம்


'உரிமையை கடமையாக செய்யணும்!'



'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில், வரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, மக்கள் நீதி மையம் தலைவர் கமல், மதுரையில் சமீபத்தில் துவக்கினார். அங்கு, நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தொழில் முனைவோரை சந்தித்தார். ஆளுங்கட்சிக்கு பயந்து, பெரிய தொழில் முனைவோர் யாரையும் காண முடியவில்லை.தொழில் முனைவோரிடம் பேசிய கமல், 'கமிஷன் ராஜ்ஜியமாக மாறிவிட்ட தமிழகத்தை, 'மிஷன் ஓரியன்டட்' ராஜ்ஜியமாக மாற்ற வேண்டியுள்ளது. அதை மாற்ற வேண்டிய கடமை, அனைவருக்கும் உண்டு. அதற்காக உங்களை, கட்சியில் சேர வேண்டாம் என, சொல்லவில்லை. உங்கள் உரிமையை, கடமையாக நினைத்து செய்ய வேண்டும்' என்றார்.அங்கிருந்த நிருபர், 'கூட்டம் முடிஞ்சு வெளியே போகும் போது, பாதி பேர் தலையை சொறிஞ்சுக்கிட்டே போக போறாங்க பாரு...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


'தைரியம் இருந்துச்சா?'



மதுரை கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், மதுரை திருப்பரங்குன்றத்தில் சமீபத்தில் நடந்தது.கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பேசுகையில், 'தி.மு.க., துணைப் பொதுச் செயலர் ஆ.ராஜா தற்போது பேசியதுபோல், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பேசியிருந்தால், அவரது நாக்கை அறுத்திருப்போம். இறந்தவரைப் பற்றி தரம் தாழ்ந்து பேசுகிற அவருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., பதில் சொல்ல வேண்டியதில்லை; நாங்களே போதும்' என்றார்.இதைக் கேட்ட, தொண்டர் ஒருவர், 'உண்மையை ஒத்துக்கிட்டாங்க பா... ஜெயலலிதா உயிருடன் இருந்த போது தான், இவங்களுக்கும் தைரியம் இருந்துருக்கு... இப்போ இல்லை' என்றார்.அருகிலிருந்த மூத்த தொண்டர், 'சும்மா சொல்லாதீங்க... ஜெ., இருந்தப்போ, இவங்க டயருக்கு கீழே தானே கிடந்தாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


ராஜிவை கொன்றது சரியா?



கோவை மாவட்டத்தில், முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி, சமீபத்தில் நிறைவு செய்தார்.அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை குறித்த, தி.மு.க., நிலைப்பாட்டில், காங்கிரசுடன் கருத்து வேறுபாடு இல்லை' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர், 'ராஜிவை கொலை செய்தது குற்றம் என, தி.மு.க., சொல்லவே இல்லை... காங்கிரசும், அதே தான் சொல்லுதா... கட்சி மீதும், தேசம் மீதும் என்ன ஒரு பற்று...' என, கிண்டல் செய்தார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'எத்தனை பேரை கொன்றாலும் பரவாயில்லை... காங்கிரசுக்கு, 'சீட்' தான் முக்கியம்...' என, தலையில் அடித்துக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-டிச-202006:02:39 IST Report Abuse
D.Ambujavalli இவர்கள் முதல்வருக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணி, வன் முறைப் பேச்சு, முறையற்ற சவால் என்று குதிக்கிறார்களே தவிர வாதத்துக்கு முன்வர மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X