சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அதிரடி தான் இப்போது லாயக்கு!

Added : டிச 19, 2020
Share
Advertisement
அதிரடி தான் இப்போது லாயக்கு!'இவர், இப்படியெல்லாம் பேச மாட்டாரே... ஏன் இவ்வளவு கோபம்' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானின், சமீபத்திய பேச்சைப் பார்த்து, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். சவுகான், அமைதியான குணம் உடையவர். அதிரடியான அரசியலில் இருந்து, முற்றிலும் விலகி நிற்பவர். இவர் தான், சமீபத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுலை, கடுமையாக
அக்கம் பக்கம்

அதிரடி தான் இப்போது லாயக்கு!

'இவர், இப்படியெல்லாம் பேச மாட்டாரே... ஏன் இவ்வளவு கோபம்' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானின், சமீபத்திய பேச்சைப் பார்த்து, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். சவுகான், அமைதியான குணம் உடையவர். அதிரடியான அரசியலில் இருந்து, முற்றிலும் விலகி நிற்பவர். இவர் தான், சமீபத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுலை, கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். 'பஞ்சாப் விவசாயிகளை துாண்டிவிடும் வகையில், ராகுல் தினமும் அறிக்கை வெளியிடுகிறார். அவருக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்... வெல்லம், கரும்பிலிருந்து வருகிறதா அல்லது இயந்திரத்திலிருந்து வருகிறதா என்பது கூட, அவருக்கு தெரியாது' என, ஆவேசமாக
பேசினார். அவரது இந்த பேச்சு, காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டுமல்லாமல், ஆளும், பா.ஜ., தரப்புக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'ராகுல் மீது, இவருக்கு ஏன் இவ்வளவு கோபம். என்னாச்சு இவருக்கு' என, பலரும் முணுமுணுத்தனர். மத்திய பிரதேச மாநில, பா.ஜ.,வினரிடம் இது குறித்து கேட்டபோது, 'தற்போதைய அரசியலில். அமைதியாக இருந்தால் காணாமல் போய் விடுவோம். அதிரடியாக பேசினால் மட்டுமே, மக்கள் நம்மை ஞாபகத்தில் வைத்திருப்பர் என, முதல்வரிடம், சிலர் கூறியுள்ளனர். அதனால் தான், இந்த மாற்றம்' என்கின்றனர். 'சவுகானிடமிருந்து, அடுத்த ஏவுகணை எப்போது பாயப் போகிறதோ' என, கவலையுடன் காத்திருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

ஓட ஓட விரட்டப் போறாங்க!

'நல்லாத்தானே போயிட்டுருக்கு... இந்த ஆள், எதற்கு தேவையில்லாமல் நம் மீது பாய்கிறார்' என, கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்.மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 'இந்த போராட்டத்தை துாண்டி விடுவதே, அமரீந்தர் சிங் தான். காங்., மேலிடத்தின் உத்தரவின்படி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, விவசாயிகளை துாண்டி விடுகிறார்' என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்துக்காக, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பலரும், அமரீந்தர் சிங்கை பாராட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், அமரீந்தர் உற்சாகத்தில் இருந்தார். இந்த நேரத்தில் தான், சத்தமில்லாமல் இந்த விஷயத்தில் ஆஜராகியுள்ளார், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். 'விவசாயிகள் போராட்டத்தில், அமரீந்தருக்கு எந்த பங்கும் இல்லை. அவரது மகன் மீது, அமலாக்கத்துறையில் வழக்கு உள்ளது. அதை, வாபஸ் பெறுவதற்காக, மத்திய அரசுடன் சேர்ந்து, விவசாயிகளை பழி கொடுக்கிறார். உள்ளடி வேலை பார்க்கிறார்' என, அதிரடியாக அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதைக்கேட்டு ஆடிப் போன அமரீந்தர், 'எனக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதில், ஏராளமானோர் திட்டமிட்டு சதி வேலை செய்கின்றனர். அதில், இந்த கெஜ்ரிவாலும் ஒருவர். விவசாயிகள், நம்மை ஓட ஓட விரட்டுவதற்கு, இவர் வியூகம் வகுத்துக் கொடுக்கிறார்' என, கண்ணீர் வடிக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X