சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : டிச 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பிரதமர் மோடி: புதிய வேளாண் சட்டங்களை ஒரே இரவில் மத்திய அரசு நிறைவேற்றி விடவில்லை. 22 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் விரிவாக விவாதித்தன; விவசாய அமைப்பினரும், வேளாண் துறை நிபுணர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை தான் இப்போது அரசு நிறைவேற்றி உள்ளது. 'டவுட்' தனபாலு: நாட்டுக்கு நல்லது செய்யும்போது எதிர்ப்பு வரத் தான் செய்யும்... எங்கள்


'டவுட்' தனபாலு

பிரதமர் மோடி: புதிய வேளாண் சட்டங்களை ஒரே இரவில் மத்திய அரசு நிறைவேற்றி விடவில்லை. 22 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் விரிவாக விவாதித்தன; விவசாய அமைப்பினரும், வேளாண் துறை நிபுணர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை தான் இப்போது அரசு நிறைவேற்றி உள்ளது.

'டவுட்' தனபாலு: நாட்டுக்கு நல்லது செய்யும்போது எதிர்ப்பு வரத் தான் செய்யும்... எங்கள் கண்ணதாசன் பாடியபடி, 'போற்றுவார் போற்றலும், துாற்றுவார் துாற்றலும் போகட்டும் கண்ணனுக்கே...' என மனதைத் தேற்றிக் கொள்ளலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தி.மு.க., லோக்சபா குழுத் தலைவர் டி.ஆர்.பாலு:
நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்ச நீதிமன்றமே உணர்ந்து, தீர்வு காண முன்வரும் நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, எதை பற்றியும் கவலைப்படாமல், குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்துஇருப்பது, கண்டனத்துக்கு உரியது. பெரியண்ணன் பாணியில் செயல்படும் போக்கை, மத்திய அரசு உடனே கைவிட்டு, கருத்தொற்றுமை ஜனநாயகம் என்ற, உன்னதமான பாதைக்கு திரும்ப வேண்டும்.

'டவுட்' தனபாலு: திட்டமிட்டபடி, குளிர்கால கூட்டத்தொடரை, மத்திய அரசு நடத்தியிருந்தால், 'எம்.பி.,க்கள் உயிரைப் பற்றி, மோடி அரசுக்கு கவலையில்லை' என்றிருப்பீர்கள். கருத்தொற்றுமை ஏற்பட கூட்டத்தை கூட்டினால், ெவளிநடப்பு செய்திருப்பீர்கள். எனவே, உங்கள் கண்டனம், ஒரு தலைப்பட்சமானது என்பதில், மக்களுக்கு, 'டவுட்டே' இல்லை!த.மா.கா., தலைவர் வாசன்:
அ.தி.மு.க., அரசு மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது. அனைத்து துறைகளிலும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டம் வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளின் வருங்காலம், வளர்ச்சி, வருமானம், வாழ்வாதாரத்தை கருதி தான், விவசாய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை அறிந்து தான், தமிழக அரசும் ஆதரிக்கிறது.

'டவுட்' தனபாலு: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்கள், பெரிய விவசாயிகளுக்கு பாதகத்தையும், சிறிய விவசாயிகளுக்கு பல சாதகங்களையும் தருகிறது என்பது தான் நடுநிலையாளர்களின் கருத்து. தஞ்சை பகுதியில் பெரிய விவசாயியான நீங்களே, மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதால், அந்த சட்டங்கள் விவசாயத்திற்கு தேவையானவை என்பதில் யாருக்கும், 'டவுட்'டே வரக் கூடாது!தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
ஒவ்வொரு இல்லத்திலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள, காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அதை வாபஸ் பெற வலியுறுத்தியும், கனிமொழி தலைமையில், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

'டவுட்' தனபாலு: உங்கள் அறிக்கைபடி, இரண்டு, 'டவுட்'டுகள் வருகின்றன. சமையல் காஸ், பெண்கள் தொடர்பானது என்பதால், கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளீர்கள். இரண்டாவது, உங்கள் மகன் உதயநிதிக்கு கட்சி போராட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அதிர்வலைகளை சமாளிக்கவே, கனிமொழிக்கும் போராட்டத்தை விட்டுக் கொடுத்தீர்களோ என்ற டவுட்டுகள் வருகின்றன!


லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் குமாரசாமி:
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை, 12 நிறுவனங்களிடமும், ஒளிரும் பட்டைகளை, இரண்டு நிறுவனங்களிடமும், ஜி.பி.எஸ்., கருவிகளை, எட்டு நிறுனங்களிடம் தான் வாங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து, வரும், 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கஉள்ளோம்.

'டவுட்' தனபாலு: போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதை பார்த்தால், நீங்கள் எதிரணியை சேர்ந்தவர்கள் என்பது, 'டவுட்' இன்றி புரிகிறது. வாடகை வாகனங்களுக்கு அவசியமான வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டைகள், ஜி.பி.எஸ்., கருவிகள் இல்லாமல் தானே, இத்தனை ஆண்டுகளாக தொழில் செய்து வந்தீர்கள். அதை கட்டாயமாக்கிய உடன், அரசு மீது புழுதிவாரி துாற்றுகிறீர்களோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது!


கேரள காங்., மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா
: கடந்த, 2015ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெற்றதை விட, சமீபத்தில் நடந்த தேர்தலில், காங்., கூடுதல் வெற்றி பெற்றுள்ளது. எனினும், தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வோம். மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்வோம்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், முந்தைய தேர்தலை விட, இந்த தேர்தலில், பா.ஜ.,வும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதற்காக கேரள மக்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக திரும்பி விட்டனர் என அர்த்தமா... மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடான கொள்கை கொண்டுள்ளது தான், காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்பது, அனைவருக்கும், 'டவுட்' இன்றி தெரியும்!

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
20-டிச-202010:50:33 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai இதுவரை நாம் ஒரு ஆரியரையும் இந்த மக்கள் விரோத மோடி ஆட்சியை எதிர்த்தும் பார்க்கவில்லை
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-டிச-202006:02:55 IST Report Abuse
D.Ambujavalli கட்சியில் பல ஆண்டுகளாக உள்ளவர், கலைஞரின் பாசறையில் பயின்றவர், ஒரு எதிர்க்கட்சி எம் பி என்ற தகுதிகளுடையவர், பெண்கள் பிரசினை மட்டுமில்லை, சம்பாதிக்கும் ஆண்களையும் பாதிக்கும் காஸ் சிலிண்டர் விலைக்காகப் போராடுவது பொருத்தமே இதில் குடும்ப அரசியல் நுழைந்தால் கீழ் மட்டம் முதல் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டும். மகனால் வரும் தண்ட . செலவுகள் கழகத்துக்குள்ளேயே முணுமுணுப்பை கொண்டு வருகிறது என்பதாலும் கனிமொழியை அனுமதித்திருக்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X