முறைகேடு பெண் அதிகாரிக்கு கட்டாய விடுப்பு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

முறைகேடு பெண் அதிகாரிக்கு கட்டாய விடுப்பு!

Added : டிச 19, 2020 | கருத்துகள் (2)
Share
முறைகேடு பெண் அதிகாரிக்கு கட்டாய விடுப்பு!''கோஷ்டிப் பூசலுக்கு கொம்பு சீவிட்டு இருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''எந்தக் கட்சியில ஓய்...'' என, விசாரித்தார், குப்பண்ணா.''திருப்பூர் மாவட்டத்துல, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும், முன்னாள் மேயர் செல்வராஜுக்கும் ஏழாம் பொருத்தம்...''தி.மு.க.,வுல புதுசா

 டீ கடை பெஞ்ச்

முறைகேடு பெண் அதிகாரிக்கு கட்டாய விடுப்பு!

''கோஷ்டிப் பூசலுக்கு கொம்பு சீவிட்டு இருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''எந்தக் கட்சியில ஓய்...'' என, விசாரித்தார், குப்பண்ணா.

''திருப்பூர் மாவட்டத்துல, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும், முன்னாள் மேயர் செல்வராஜுக்கும் ஏழாம் பொருத்தம்...

''தி.மு.க.,வுல புதுசா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியை ஆரம்பிச்சு, அதன் செயலரா கார்த்திகேய சிவசேனாதிபதியை நியமிச்சு இருக்காங்க... இவரை, சாமிநாதனுக்கு எதிரா, செல்வராஜ் தரப்பு கொம்பு சீவிட்டு இருக்குதுங்க...

''கார்த்திகேயன், ஏற்கனவே சாமிநாதன் குறி வச்சிருக்கிற காங்கேயம் தொகுதியை கேட்டுட்டு இருக்காரு... இதை வச்சே, ரெண்டு தரப்புக்குமான பிரச்னையை, செல்வராஜ் தரப்பு, ஊதி பெருசாக்கிட்டு இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பெண் அதிகாரி காட்டுல பணமழை பொழியுது பா...'' என, அடுத்த விஷயத்திற்கு மாறினார், அன்வர்பாய்.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கால்நடை துறையில, காலியா இருந்த, 1,150 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, சமீபத்துல முடிவுகளை வெளியிட்டாங்க... இதுல, 1,900 பேர் தேர்ச்சி பெற்றிருக்காங்க பா...

''இப்ப, சான்றிதழ் பதிவேற்றும் பணி நடந்துட்டு இருக்குது... ஏற்கனவே, பதிவு மூப்பு அடிப்படையில பணியில் அமர்த்தப்பட்ட, 500க்கும் மேற்பட்ட உதவி மருத்துவர்களும் இதில் தேர்வு பெற்றிருக்கிறதால, எல்லாருக்கும் வேலை கிடைக்கிற சூழல் இருக்குது பா...

''ஆனாலும், நேர்முகத் தேர்வுல தங்களை கழிச்சு கட்டிரக் கூடாதுன்னு பலரும், துறையில இருக்கிற பெண் அதிகாரியை அணுகியிருக்காங்க... அவங்க, ஒரு பணியிடத்துக்கு, 15 லட்சம் ரூபாய்னு சொல்லி, 5 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிட்டு இருக்காங்க...

''காலியிடங்கள் விபரம் தெரியாத பெண்கள் பலரும், இந்த வேலைக்காக போட்டி போட்டு பணத்தை குடுத்துட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''அது சரி... லட்சுமி கடாட்சம் இருக்கிற சிலரிடம், ஞானம் இருக்க மாட்டேங்குதே...'' என, சலித்து கொண்ட அண்ணாச்சி, ''பெண் அதிகாரியை கட்டாய விடுப்புல அனுப்பிட்டாவ வே...'' என்றார்.

''எந்த ஊருல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற திருவாலங்காட்டுல, கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கு... இங்க, ஒரு பெண் அதிகாரி இருந்தாங்க வே...

''சமீபத்துல அரசாங்கம், 2 கோடி ரூபாயை வழங்கி, விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையை பிரிச்சு குடுக்க சொல்லிஇருக்கு... பெண் அதிகாரியோ, இப்ப ஆலைகளுக்கு புதுசா கரும்பு தர்ற விவசாயிகளுக்கு, அட்வான்சா, பிரிச்சு குடுத்துட்டாங்க வே...

''இதுக்காக, விவசாயிகளிடம், தலா, 5,000 ரூபாய் வசூல் பண்ணிட்டாங்களாம்... கடுப்பான உயர் அதிகாரிகள், பெண் அதிகாரியை கண்டிச்சு, ரெண்டு மாசம் லீவுல போக சொல்லிட்டாவ... ஆனாலும், பெண் அதிகாரி கெத்தை விட்டு கொடுக்காம, 'உடம்பு சரியில்லை... அதான் லீவு போட்டு இருக்கேன்'னு சக அதிகாரிகளிடம், 'அளந்துட்டு' இருக்காங்க வே...'' என்றார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, நாளிதழை புரட்டிய குப்பண்ணா, ''டிவி நடிகை சித்ரா விவகாரத்துல, இன்னும் மர்மங்கள் இருக்கும் போலிருக்கே...'' என, முணுமுணுத்தபடியே படிக்க, மற்றவர்கள் நகர்ந்தனர்.


சசிகலா அணிக்கு தாவ தயாராகும் தி.மு.க.,வினர்!வயிற்றை பிடித்தபடி, இடைவிடாமல் சிரித்த அந்தோணிசாமியை, நண்பர்கள் உற்று பார்த்தனர்.

''என்னன்னு சொல்லிட்டு சிரியும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மக்கள் நீதி மையத் தலைவர் கமல், திண்டுக்கல்லில் தேர்தல் பிரசாரம் செய்ய போயிருக்கார்... திருமண மண்டபத்துல நடந்த கூட்டத்துல, கமலை வரவேற்க, இரண்டு பேண்ட் வாத்திய குழுக்களை ஏற்பாடு செஞ்சிருந்தாங்க...

''நிகழ்ச்சி முடிஞ்சு, கமல் சென்றபோது, இரு குழுவினரும் எதிரெதிரே நின்னு, பேண்ட் வாத்தியத்தை வாசிச்சாங்க... அந்த நிகழ்ச்சியை கட்சியினரும், பொதுமக்களும் வேடிக்கை
பார்த்தாங்க...

''இதனால, இரு குழுக்களுக்கும் இடையே, நடிகர் வடிவேலுவின் காமெடி போல, 'யார் பெரிய ஆளுன்னு, நல்லா அடிச்சுக் காட்டு' என, பிரச்னை கிளம்பிருச்சுங்க...

''இரு குழுவும், நல்லா அடிச்சாங்க... அப்படியே, இரு தரப்புக்கும் இடையே அடிதடி உருவாகி, அந்த பகுதியே கலவரமாகிடுச்சுங்க...

''இந்த மோதலால், அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினாங்க... போலீசார் வந்து, பேண்ட் வாத்திய குழுவினரை லத்தியால், 'கவனிச்சு' அனுப்பியிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.இதைக் கேட்டதும், நண்பர்களும் சிரித்தனர்.

''கல்யாணத்துக்கு தேதி வச்ச உடனே, பிள்ளைக்கு பேரு வச்ச கதையாயிருக்கு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''இது என்ன கூத்து பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபீசுக்கான அடிக்கல் நாட்டு விழா, 11ம் தேதி நடந்துச்சு... இந்த விழா நடந்து, மூணு நாளைக்குள்ள, தி.மு.க.,வினர், கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழா நோட்டீஸ் அடித்து, ஊர் முழுக்க ஒட்டியிருக்காவ வே...

''அதுல பெரிய காமெடி என்னன்னா, கலெக்டர் ஆபீசை, நாளைய தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்குறாருன்னு இருந்துச்சு... இதெல்லாம் ரொம்ப ஓவர் நம்பிக்கையா இருக்குல்லா...'' என முடித்தார், அண்ணாச்சி.

''சசிகலா அணிக்கு, தி.மு.க.,வினர் சிலர் தாவ தயாரா இருக்காங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''நம்பறா மாதிரி சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அரசியல்ல என்ன வேணும்னாலும் நடக்கும்.... சட்டசபை தேர்தல் நடக்க இருக்குறதால, அரசியல் கட்சிகளில் ஆள் பிடிப்பு படலம் நடந்துட்டு வருது பா...

''அ.தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட்டவங்க தான், தினகரனின், அ.ம.மு.க.,வில் நிர்வாகிகளாக இருக்காங்க... அவர்களில் சிலர், தினகரனின் செயல்பாடு பிடிக்காததால, தி.மு.க.,வுக்கு தாவிட்டாங்க பா...

''பெங்களூரு சிறையில இருக்குற சசிகலா, அடுத்த மாசம் விடுதலையாக போறாங்க... அதனால, தி.மு.க.,வுக்கு போனவங்க எல்லாம், 'தினகரனை பிடிக்காம தான், தி.மு.க.,க்கு போனோம்...

''எங்களுக்கு சசிகலா தான் முக்கியம்'னு சொல்லிட்டு இருக்காங்களாம்... அதனால, தி.மு.க.,வில் இணைந்த, அ.ம.மு.க.,வினர், சசிகலா பக்கம் தாவ தயாராகி வராங்க பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.

''இந்த தேர்தல் முடியுறதுக்குள்ள இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் பார்க்கணுமோ...'' என்றபடியே, குப்பண்ணா நடையை கட்ட, நண்பர்களும் இடத்தை காலி செய்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X