டிச., 20, 1940
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில் பிறந்தவர், யாமினி கிருஷ்ணமூர்த்தி. சிதம்பரத்தில், வளர்ந்தார். பரத கலையில் தேர்ச்சி பெற்றவர், சென்னையில் அரங்கேற்றம் நிகழ்த்தினார்.சிறந்த பரத கலைஞராக உயர்ந்தவர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான நர்த்தகியாக பணியாற்றினார். பரதம் மட்டுமின்றி, குச்சிப்புடியிலும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார். டில்லியில், தன் பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.
தன் வாழ்க்கை வரலாற்றை, ஆங்கிலத்தில், 'ஏ பேஷன் பார் டான்ஸ்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். நடனத்திற்காக, திருமணம் செய்து கொள்ளவில்லை.கடந்த, 1968ல், 'பத்மஸ்ரீ' விருது பெற்றார். 'பத்ம பூஷன், பத்ம விபூஷன்' மற்றும் 'நாட்டிய சாத்திரா' உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார்.நடன கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE