பொது செய்தி

இந்தியா

சென்னையில் பொங்கல் மோகன் பாகவத் திட்டம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
தமிழத்துக்கு இரண்டு நாள் பயணமாக வர உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், சென்னையில், குடிசைவாசிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாட உள்ளார்.மோகன் பாகவத், தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக, அடுத்த மாதம், 13ல் வருகிறார். சென்னையில், தலித்கள் அதிகம் வசிக்கும் குடிசை பகுதியில், பொங்கல் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.மேலும், இரண்டு நாள் பயணத்தில், தென் மாநிலங்களை சேர்ந்த ஹிந்து

தமிழத்துக்கு இரண்டு நாள் பயணமாக வர உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், சென்னையில், குடிசைவாசிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாட உள்ளார்.

மோகன் பாகவத், தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக, அடுத்த மாதம், 13ல் வருகிறார். சென்னையில், தலித்கள் அதிகம் வசிக்கும் குடிசை பகுதியில், பொங்கல் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.மேலும், இரண்டு நாள் பயணத்தில், தென் மாநிலங்களை சேர்ந்த ஹிந்து அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் இன்னும், ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால், பா.ஜ.,வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது பற்றி தமிழக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஒருவர் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவராக இருப்பவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை, அனைத்து மாநிலங்களுக்கும் செல்வது வழக்கம். அந்த வகையில் தான் பாகவத் தமிழகத்துக்கு வர உள்ளார். அவர் எந்த அரசியல் கட்சி தலைவரையும் சந்தித்துப் பேச மாட்டார். அவருடைய இரண்டு நாள் நிகழ்ச்சிகள், இன்னும் முடிவாகவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
- புதுடில்லி நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X