பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., பட்டதாரிகளுக்கு உடனடி பணி நியமனம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் செயல்படும், மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், வேலைஇல்லாத பட்டதாரி, டிப்ளமா இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று தரப்படுகின்றன.இதன்படி, பி.இ., மற்றும் டிப்ளமா முடித்த இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் சமீபத்தில் நடந்தது. பல்வேறு தனியார்

சென்னை:தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் செயல்படும், மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், வேலைஇல்லாத பட்டதாரி, டிப்ளமா இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று தரப்படுகின்றன.

இதன்படி, பி.இ., மற்றும் டிப்ளமா முடித்த இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் சமீபத்தில் நடந்தது. பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் பங்கேற்றன. இதில், 121 பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா இளைஞர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் தகுதியானவர்களுக்கு, உடனடி பணி நியமன உத்தரவை, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழக திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் வீரராகவ ராவ் வழங்கினார். இந்த முகாமில், 34 பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும், 20 பேர், திறன் பயிற்சிக்கும் தேர்வு பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X