சென்னை:விவசாயத்திற்கு, சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவுகளின் கீழ், மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
சாதாரணப் பிரிவில், மின்சாரம், மின் வழித்தட செலவு இலவசம். சுயநிதி பிரிவில், மின்சாரம் மட்டும் இலவசம். மின் வழித்தட செலவை, விவசாயிகள் ஏற்க வேண்டும்.நடப்பாண்டில், சாதாரணப் பிரிவில், ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்போரில், 25 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கவும்; சுயநிதி பிரிவில், 'தத்கல்' எனப்படும், விரைவு திட்டத்தில், 25 ஆயிரம் இணைப்பு வழங்கவும், மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
விரைவு திட்டத்தில், மின் வழித்தட செலவிற்காக, 2.50 லட்சம் முதல், 4 லட்சம் ரூபாய் வரை, ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்திட்டத்தில், மின் இணைப்பு பெற விரும்புவோர் விண்ணப்பிக்கும் பணி, செப்., 21 முதல் அக்., 31 வரை நடந்தது. மின் இணைப்பு கேட்டு, 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
சாதாரண பிரிவில், மின் இணைப்பு வழங்கும் பணி, ஜூலையிலும். விரைவு இணைப்பு வழங்கும் பணி, நவம்பரிலும் துவங்கியது. இதுவரை, இரண்டு பிரிவிலும், 19 ஆயிரம்பேருக்கு, விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், மார்ச் மாதத்திற்குள் மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE