அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை விமர்சிக்க தகுதியில்லை முதல்வருக்கு பொன்முடி கண்டனம்

Added : டிச 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''கமிஷனுக்காக, முதல்வர் பதவியை பயன்படுத்தும் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க.,வையோ, தி.மு.க., தலைவரையோ, விமர்சிக்க தகுதியில்லை,'' என, தி.மு.க., துணை பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க., ஒரு ஊழல் கட்சி. பதவியிலிருக்கும் போதே, சிறைக்கு போன முதல்வரை பெற்ற கட்சி. சி.பி.ஐ., விசாரணையை சந்திக்கும் முதல்வரை கொண்ட கட்சி.சி.பி.ஐ.,

சென்னை:''கமிஷனுக்காக, முதல்வர் பதவியை பயன்படுத்தும் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க.,வையோ, தி.மு.க., தலைவரையோ, விமர்சிக்க தகுதியில்லை,'' என, தி.மு.க., துணை பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:அ.தி.மு.க., ஒரு ஊழல் கட்சி. பதவியிலிருக்கும் போதே, சிறைக்கு போன முதல்வரை பெற்ற கட்சி. சி.பி.ஐ., விசாரணையை சந்திக்கும் முதல்வரை கொண்ட கட்சி.சி.பி.ஐ., வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு போன்றவற்றை வைத்துக் கொண்டு, தி.மு.க.,வை சுயநலக் கட்சி எனக்கூற முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது?

பொதுப்பணிக்கும், பொது நலத்திற்கும், முதல்வர் பழனிசாமிக்கும் சம்பந்தமில்லை. அவரது அமைச்சர்களுக்கும் தொடர்பில்லை. பத்து ஆண்டுகள் கஜானாவை சுரண்டியதும், கமிஷன் அடித்ததும் மட்டும் தான், முதல்வரும், அவரின் கீழ் உள்ள அமைச்சர்களும் செய்த மக்கள் பணி.கோடி கோடியாக செலவழித்து, அரசு பணத்தில் விளம்பரம்; ஜெயலலிதா என்ற நினைப்பில், போலீஸ் பாதுகாப்பு; ஆடம்பரத்தின் உச்சத்தில், ஆணவத்தில் இருக்கும் முதல்வர் பழனிசாமி., 'நான் சாதாரண பழனிசாமி' என, வேடம் போட வேண்டாம்.

முதல்வர் தன் குடும்பத்தின் வழியே, கட்சியை நடத்துகிறார். இது, பொதுப்பணித் துறையிலும், நெடுஞ்சாலைத் துறையிலும், 'டெண்டர்' எடுக்கும் அனைத்து கான்ட்ராக்டர்களுக்கும் தெரியும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொரோனா காலத்தில், முதலில் வீதிக்கு வந்து பணியாற்றியவர். மக்களுக்கு தேவையான உணவு, மருந்துகளை வழங்கியவர்.

'ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சியை நடத்தி, தமிழக மக்களுக்கு பணியாற்றியவர். அப்போதெல்லாம், 'தொற்று நோய் இருக்கிற நேரத்தில், இப்படி வெளியே போய் நோயை பரப்பலாமா' என குதர்க்கமாக பேசியது, இதே முதல்வர் தான்.கொரோனாவில் பணியாற்றிய முதல்வர் மற்றும் அ.தி.மு.க., அமைச்சர்களின் கதை, 7,500 கோடி ரூபாய் செலவிட்டதை பார்க்கும் போது, நிச்சயம் வெளியே வரும். அப்போது, முதல்வரும், அமைச்சர்களும், கொரோனாவை பயன்படுத்தி, 'பேரிடர் நிதி'யில் நடத்திய திருவிளையாடல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.

முதல்வர், எந்த நேரத்திலும், நெடுஞ்சாலைத் துறை ஊழலில், சி.பி.ஐ., விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும். மக்கள் பணியாற்றும், தி.மு.க., தலைவரை விமர்சிக்கும் முன், கமிஷனுக்காகவே முதல்வர் பதவியை பயன்படுத்தும் பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை. இவ்வாறு, பொன்முடி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
20-டிச-202004:25:11 IST Report Abuse
Baskar thi.mu.ka.vai patri muthalvar visaarikkaamal veru yaar visaarippaarkal. pondaatti munthaanaiyil olinthu kondu uzhal pannum unnai pondravarkalai eppadi visaarippathu. kudumpame uzhal thalaivanum uzhaal thalaivan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X