சென்னை:திருவாரூரில் உள்ள தொழுவூரில், நுகர்பொருள் வாணிபக் கழகம், 16 கோடி ரூபாய் செலவில், நவீன அரிசி ஆலை அமைக்க உள்ளது.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, 21 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. அதில், 15ல் புழுங்கல் அரிசியும்; 6ல் பச்சரிசியும் அரவை செய்யப்படுகின்றன. இந்திய உணவு கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை, நுகர்பொருள் வாணிபக் கழகம், தனக்கு சொந்தமான மற்றும் 351 தனியார் அரிசி ஆலைகள் வாயிலாக, அரிசியாக மாற்றுகிறது.அந்த அரிசி, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டு தாரருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் உள்ள தொழுவூரில், வாணிபக் கழகம், 16 கோடி ரூபாய் செலவில், நவீன அரிசி ஆலை அமைக்க உள்ளது.அந்த ஆலை, ஆண்டுக்கு, 30 ஆயிரம் டன் அரவை திறன் உடையதாக இருக்கும். அடுத்த ஆண்டு, மார்ச் மாதத்திற்குள் கட்டுமான பணிகளை துவக்கி, 18 மாதங்களில், ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE