கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர் மறு கவுன்சிலிங் வழக்கு தொடுத்தவருக்கு முன்னுரிமை

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை:மருத்துவ மறுகவுன்சிலிங் போது, வழக்கு தொடுத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு, முன்னுரிமை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காத்திருப்பு பட்டியல்தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், கட்டணம் செலுத்த முடியாததால், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கவுன்சிலிங்கில் பங்கேற்ற, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா, இலக்கியா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில்

சென்னை:மருத்துவ மறுகவுன்சிலிங் போது, வழக்கு தொடுத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு, முன்னுரிமை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காத்திருப்பு பட்டியல்

தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், கட்டணம் செலுத்த முடியாததால், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கவுன்சிலிங்கில் பங்கேற்ற, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா, இலக்கியா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்ற மறுநாள், கல்வி கட்டணத்தை வற்புறுத்தாமல், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களை சேர்த்து கொளளும்படி, தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, தங்களுக்கும் மருத்துவ படிப்பில், இடம் ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்,இருவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மேலும், சவுமியா ஸ்ரீ என்ற மாணவியும் மனு தாக்கல் செய்தார்.இம்மனுக்கள் நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயன் ஆஜராகி, ''அரசு பள்ளி மாணவர்கள், 60 பேருக்கான மறுகவுன்சிலிங், சம வாய்ப்பு, தகுதி மற்றும் தரவரிசை அடிப்படையில் நடத்தப்படும்,'' என்றார்.

மாணவியர் இருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''வழக்கு தொடுத்தவர்களுக்கு, மறுகவுன்சிலிங்கின் போது, முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

கவுன்சிலிங்கின் போது, பல்வேறு காரணங்களால், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், மனுதாரர்கள், நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரியுள்ளனர். அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு, பலன் கிடைக்க வேண்டும்.மேலும், மனுதாரர்கள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, மறுகவுன்சிலிங்கின் போது, அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும். அதன்பின், மற்றவர்களுக்கு, இந்த உத்தரவின் பலன் கிடைக்க வேண்டும்.


விளக்கம்

மறுகவுன்சிலிங்கின் போது, மனுதாரர்களை நிர்கதியாக விட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இந்த விளக்கம் தேவைப்படுகிறது.அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான, மறு கவுன்சிலிங் நடவடிக்கையை, அரசு தொடரலாம். இவ்வழக்கு விசாரணை, ஜன., 8க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X