குழந்தைகள் நலக் குழு உறுப்பினரை நீக்க வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் நலக் குழு உறுப்பினரை நீக்க வழக்கு

Added : டிச 19, 2020
Share
சென்னை:செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து, தாமோதரன் என்பவரை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு அரசு சிறப்பு முகாமில் உள்ள, குழந்தைகள் நல குழு உறுப்பினர் குளோரி ஆனி உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவில், 'குழந்தைகள் நல

சென்னை:செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து, தாமோதரன் என்பவரை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு சிறப்பு முகாமில் உள்ள, குழந்தைகள் நல குழு உறுப்பினர் குளோரி ஆனி உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவில், 'குழந்தைகள் நல குழுவில், உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதி சட்டத்தை மீறி செயல்படுகிறார். 'இவர், இந்த பொறுப்பில் தொடர்வது, காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. எனவே, இவரை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, பிப்., 2ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X