பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லையில் பயணியர் நுழைவு சீட்டால் அவதி

Added : டிச 19, 2020
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பல்லவர் கால கலைச்சின்னங்கள், ஒன்பது மாதங்களுக்கு பின், இம்மாதம், 14ம் தேதி திறக்கப்பட்டன. சிற்பங்களை பராமரிக்கும் தொல்லியல் துறை, வைரஸ் பரவல் தடுப்பு, வழிகாட்டு முறைகளுடன், சுற்றுலா பயணியரை அனுமதிக்கிறது.இத்துறை, நுழைவுக் கட்டணத்தை, பணமாக பெறாமல், இணையவழி பரிமாற்றத்தில் பெற்று, இணையச்சீட்டு வழங்குகிறது. அவ்வகையில், ஒரு நாளுக்கு, 2,000

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பல்லவர் கால கலைச்சின்னங்கள், ஒன்பது மாதங்களுக்கு பின், இம்மாதம், 14ம் தேதி திறக்கப்பட்டன.

சிற்பங்களை பராமரிக்கும் தொல்லியல் துறை, வைரஸ் பரவல் தடுப்பு, வழிகாட்டு முறைகளுடன், சுற்றுலா பயணியரை அனுமதிக்கிறது.இத்துறை, நுழைவுக் கட்டணத்தை, பணமாக பெறாமல், இணையவழி பரிமாற்றத்தில் பெற்று, இணையச்சீட்டு வழங்குகிறது. அவ்வகையில், ஒரு நாளுக்கு, 2,000 பேரை மட்டும் அனுமதிக்க, தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று, பயணியர் அதிகரித்தனர். பகல், 1:00 மணிக்கே, இணையவழியில், 2,000 நுழைவுச்சீட்டு முடிந்தது.இதன் பின் வந்த பயணியர், இணையச்சீட்டு பெற முடியாததால், ஊழியருடன் தகராறு செய்தனர்.இது குறித்து, உயரதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டு, பயணியரிடம் பணமாக பெற்று, நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X