விருதுநகர் : கிறிஸ்துமஸ் நெருங்கியாச்சு வீடுகளிலும் களைகட்ட துவங்கியாச்சு கிறிஸ்துமஸ் . மின்னொளியில் ஆலயங்கள், ஆங்காங்கு ஸ்டார்கள்,குடில்கள் வரிசையில் பேக்கரியிலும் விதவிமான கேக்குகளும் ரெடியாக உள்ளது.
இவ்விழாவில் கேக் வகைகளும் முக்கிய இடம் பிடிப்பதுண்டு. இதை உண்பதால் மன மகிழ்ச்சி , பேரின்பத்திற்கு அளவே இல்லை என்றே சொல்லாம். குழந்தைகளுக்கு கேக் உண்பதில் என்றுமே அலாதி பிரியம். எத்தனை இனிப்புகள் வந்தாலும் கிறிஸ்துமஸ் கேக் ஸ்பெஷல் தான். கிறிஸ்துமஸ் கேக்கில் பிளம் கேக்குகள் தான் நாவில் எச்சிலை ஊற செய்வதுடன் அதிகம் விற்பனையாவதும் கூட. இதில் ரிச் பிளம் கேக், புடிங் கேக், பீஸ் பிளம் கேக், மில்க் ரோல், மக்ரூன் கேக், க்ரீம் கேக், பட்டர் ஐஸிங் கேக், செர்ரி கேக், பீன்ஸ் கேக், ஹனி கேக், ஆப்பிள், வானவில், கூடை, கோதுமை, வெஜ், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட கேக்குகள் கிறிஸ்துமசை சிறப்பாக்குகின்றன. இவை தவிர குடில்கள் அமைப்பது, புத்தாடை வாங்குவது என கிறிஸ்தவர்களின் பண்டிகை களை கட்டி உள்ளது.
குழந்தைகள், சிறுவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுக்காகவும், ஆட்டம் பாட்டத்திற்காகவும் காத்திருக்கின்றர். இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ஆரவாரமும் பெருகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE