சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார மருத்துவர் லலிதா, டாக்டர் அரவிந்தன் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் குணசுந்தரி தேவேந்திரன் வரவேற்றார்.புவனகிரி ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் குத்து விளக்கேற்றினார்.அ.தி.மு.க.,ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், புவனகிரி நகர செயலாளர் செல்வக்குமார், ஜெயசீலன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சபரிராஜா, சிவக் குமார், கூட்டுறவு சங்க தலைவர் பிரித்வி, ராமலிங்கம், ராமகிருஷ்ணன், அண்ணாதுரை, அகர ஆலம்பாடி வேல்முருகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்பெரியநற்குணம் ஊராட்சி புவனகிரி தொகுதியில் இருப்பதால் சரவணன் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க., ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசத்திற்கும் அழைப்பு கொடுத்தனர். விழாவிற்கு எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய சேர்மன் இருவரும் ஒரே நேரத்தில் வந்தனர். இதனால் தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பணியிலிருந்து போலீசார் இருதரப்பினரையும் தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பினர். இதில் சிறிது நேரம் பெரியநற்குணம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE