பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் கூட்டம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு: சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஆலையின் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் முனியம்மாள் வரவேற்றார். ஆலையின் துணைத்தலைவர் விஞாயகமூர்த்தி, மேலாண் இயக்குனர் சுப்ரமணியன், தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன், நிர்வாக இயக்குனர்கள் குணசேகரன், சிவக்குமார், ஆதிமூலம்,

சேத்தியாத்தோப்பு: சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஆலையின் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் முனியம்மாள் வரவேற்றார். ஆலையின் துணைத்தலைவர் விஞாயகமூர்த்தி, மேலாண் இயக்குனர் சுப்ரமணியன், தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன், நிர்வாக இயக்குனர்கள் குணசேகரன், சிவக்குமார், ஆதிமூலம், சக்திவேல், விவசாய சங்க நிர்வாகிகள் அப்பாத்துரை, சிட்டிபாபு, வீரசோழன், ராமசாமி, இளவரசன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிபிரகாஷ், கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், இந்தாண்டு கரும்பு அரவை துவங்குவதற்காக கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகள் மற்றும் டிராக்டர் ஓட்டுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.ஆலையில் அரவைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தடையில் அரவை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பேசினர்.கரும்பு அலுவலர்கள் ராஜாதுரை, ரவிக்கிருஷ்ணன், பொறியாளர் செல்வேந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் வைத்தியநாதசாமி, குஞ்சிதபாதம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X