சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலேசியாவில் அருப்புக்கோட்டை தொழிலாளி பலி

Added : டிச 19, 2020
Share
Advertisement
அருப்புக்கோட்டை, : மலேசியாவில் இறந்த அருப்புக்கோட்டை தொழிலாளி உடலை ஊருக்கு கொண்டு வர அ.தி.மு.க., ஒன்றிய செயலர் யோக வாசுதேவன் அமைச்சர் மற்றும் கலெக்டர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அன்னக்கிளி. இவரது கணவர் சந்திரன் மலேசியாவில் வேலைக்கு சென்றார். நவ. 21 ல் இறந்து விட்டதாக இம்மாதம் 15ம் தேதி அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை, : மலேசியாவில் இறந்த அருப்புக்கோட்டை தொழிலாளி உடலை ஊருக்கு கொண்டு வர அ.தி.மு.க., ஒன்றிய செயலர் யோக வாசுதேவன் அமைச்சர் மற்றும் கலெக்டர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அன்னக்கிளி. இவரது கணவர் சந்திரன் மலேசியாவில் வேலைக்கு சென்றார். நவ. 21 ல் இறந்து விட்டதாக இம்மாதம் 15ம் தேதி அருப்புக்கோட்டை தாசில்தார் மூலமாக தகவல் வந்துள்ளது. கணவர் உடலை கொண்டு வருவது தெரியாது திகைத்த அன்னக்கிளி கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளார். அதில், எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வறுமையில் இருப்பதாகவும், அரசு செலவில் கணவர் உடலை கொண்டு வர உதவி செய்து, இறப்பிற்கு நிவாரணம், வேலை செய்த கூலி வழங்க ஏற்பாடு செய்ய கேட்டுள்ளார்.

இதுபோல் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் எஸ். ஒய். வாசுதேவனை சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.எஸ். ஒய். யோக வாசுதேவன் கூறுகையில், " கலெக்டரிடம் பேசியதன் மூலம் அன்னக்கிளி கணவர் உடலை கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் விரைவில் உடலை கொண்டு வர அரசிடம் பரிந்துரைக்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமும் கேட்டுள்ளேன்,''என்றார்-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X