சென்னை : சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 40 படுக்கை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், முதியோர் பாதுகாப்பு நலன் மற்றும் முதியோர்கள் பராமரிப்பாளர்களுக்கான கையேட்டினை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டார். தொடர்ந்து, கட்டட வேலையின் போது, தவறி விழுந்து படுகாயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, 40 வயது பெண்ணிடம் நலம் விசாரித்தார்.மேலும், 40 படுக்கை வசதிகள் கொண்ட ஆதரவற்றவர்களுக்கான மறுவாழ்வு மையம், புற்றுநோயாளிகளுக்கான குணமளிக்கும் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார்.அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் உள்ளனர்.
அவர்களை போற்றி பாதுகாக்க வேண்டும்; பராமரிக்க வேண்டும்; துணை நிற்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி, நிகழ்ச்சி நடைபெறுகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு, உரிய சிகிச்சை அளித்து, அவர்களை கண்காணிக்கும் வகையில், புதிதாக மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.கட்டட வேலையின் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண்ணுக்கு, ஆறு மணிநேரம் தொடர் சிகிச்சை அளித்து, டாக்டர்கள் காப்பாற்றி உள்ளனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 27 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது; 4.87 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில், இதுபோன்ற அவசர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. டாக்டர்களின் பங்களிப்பை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.எய்ம்ஸ் குறித்து விளக்கம்!அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிலம் கொடுக்காமல், எப்படி சுற்றுச்சுவர் கட்ட முடியும். தமிழக அரசு மருத்துவமனை கட்டுவதற்கு நிலம் கொடுத்துள்ளது. அங்கு, 7.50 கோடி ரூபாய் செலவில், சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது. கொரோனா பேரிடர் காலம் என்பதால், ஜப்பான் நிறுவனம், தமிழகத்துக்கு வந்து பார்வையிட்டு, நிதியை வழங்குவதில் சற்று தாமதம் ஆகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE