விருத்தாசலம்; கம்மாபுரம்அடுத்த வி.குமாரமங்கலம் மணிமுக்தாறு அணைக்கட்டில், நண்பர்களுடன் குளித்த மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.கம்மாபுரம்அடுத்த கோபாலபுரம் காலனிசெல்வராஜ் மகன் அலெக்சாண்டர், 15; விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். நேற்று பகல் 2:00 மணிக்குநண்பர்களுடன், வி.குமாரமங்கலம் மணிமுக்தாற்று அணைக்கட்டில் குளித்தார்.தண்ணீர் வரத்து அதிகரித்ததால், அலெக்சாண்டர் ஆற்றில் மாயமானார். கம்மாபுரம் போலீசார், விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் தேடி,உடலைமதியம் 2:45 மணிக்குமீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE