கோவை:குற்றச்சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் தெற்கு உட்கோட்டத்தில், கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோவை மாநகர போலீஸ் கிழக்கு உட்கோட்டத்திலுள்ள சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி ஆகிய மூன்று போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்தன. இப்போலீஸ் ஸ்டேஷன்களில் தலா, 10 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.கண்காணிப்பு, ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். இதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் குறைந்தன.தற்போது தெற்கு உட்கோட்டத்தில் உள்ள போத்தனுார், குனியமுத்துார் ஆகிய இரு போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. இவ்விரு போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தலா, 10 வீதம், 20 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை மாநகர போலீஸ் குற்றப்பிரிவு துணை கமிஷ்னர்(பொறுப்பு) ஸ்டாலின் கூறுகையில், ''குற்றச்சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் உள்ள, போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பகல், இரவு என, சுழற்சி முறையில் கண்காணிப்பு, ரோந்து பணிகள் மேற்கொள்வர். மாநகரில் இதுவரை நடந்துள்ள, 51 செயின் பறிப்பு சம்பவங்களில், 80 சதவீத குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE