கடலுார்; நேரு யுவகேந்திரா இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கடலுார் மாவட்ட நேரு யுவகேந்திரா ஆண்டு தோறும் மாவட்ட அளவில்சிறப்பாக சேவை புரியும் இளைஞர், மகளிர் மன்றங்களை தேர்வு செய்து, விருது வழங்கி வருகிறது. 2019-20ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருது வழங்கப்பட உள்ளது.இந்த விருதுக்கு கடலுார் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிந்து, நேரு யுவகேந்திராவுடன் இணைந்து செயல்படும் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம்.கடந்த 2019 ஜன 1ம் தேதி முதல் 2020 மார்ச் 30ம் தேதி வரைமேற்கொண்ட நற்பணிகள் மட்டுமே விருதுக்கு பரிசீலிக்கப்படும். விருது ரூ. 25 ஆயிரம் காசோலை வழங்கப்படும்.மாவட்ட அளவில் தேர்வாகும் மன்றம், மாநில விருதுக்கு பரிந்துரைக்கப்படும். மாநில அளவில் தேர்வாகும் மன்றத்திற்கு ரூ. 1லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும்.மாநில விருது பெறும்மன்றம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும். தேசிய அளவில் முதலிடம் பெறும் மன்றத்திற்கு ரூ. 5 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும்.விண்ணப்ப படிவங்கள் நெ.5A சக்கரை தெரு, 2வது தளம்,புதுப்பாளையம், கடலுார் - 607 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது முகவரியிட்ட ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய உறையுடன்வேண்டுகோள் கடிதம் அனுப்பி பெறலாம்.இதில் தாங்கள் செய்த சேவைக்கான ஆதாரங்களை இணைத்து வரும் 28ம் தேதி மாலை 5மணிக்குள் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட இளைஞர் அலுவலர் ரிஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE