கோவை:மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்உடனடி நடவடிக்கை எடுக்க, கோவை எம்.பி., நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.கோவை எம்.பி., நடராஜன் அறிக்கை:மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் நடத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், கோவையில், 400க்கும் மேற்பட்ட பவுண்டரிகள் காலவரையற்ற, வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றன.பவுண்டரி தொழிலுக்கான மூலப்பொருட்கள் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே 'ஜாப் ஆர்டர்'களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்கும் கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு அனைத்து தொழில்களுக்கும் பாதிப்பு தருகிறது.மத்திய அரசு மூலப்பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்துவதுடன், இதற்கென, ஒரு ஆய்வு கமிட்டி அமைக்க வேண்டும்.ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்து பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.அடுத்த கட்டமாக குறு, சிறு தொழில்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. கோவை மாவட்டத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்கூடங்கள் மூடப்பட்டால், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த,நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE