ஆவடி : ஆவடியில், குளத்தில் மூழ்கி, 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.ஆவடி, புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் தங்கமணி, 43; கொத்தனார்.இவரது மகன் யுவராஜ், 10. நேற்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து, அதே பகுதியில் உள்ள கன்னியம்மன் நகர் குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தவறுதலாக குளத்தில் விழுந்து சேற்றில் சிக்கினார்.நண்பர்கள், அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். ஆனால், அதற்குள் சிறுவன் மூச்சுத்திணறி மயக்கமடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள், பரிசோதித்து சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE