சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் போல் நடித்து கொள்ளை 'பலே' கும்பலில் ஐந்து பேர் கைது

Added : டிச 19, 2020
Share
Advertisement
கே.கே.நகர், : கே.கே.நகரில், போலீஸ் போல் நடித்து, வீட்டை சோதனை செய்வது போல், நகை, பணம் திருடிச் சென்ற ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, கே.கே.நகர், 11வது செக்டாரைச் சேர்ந்தவர் பாண்டியன், 45; காஸ் சிலிண்டர் பொருத்துவதற்கான உதிரிபாகங்களை, மொத்தமாக விற்பனை செய்யும் ஏஜன்சி நடத்தி வருகிறார்.கடந்த, 9ம் தேதி, பாண்டியன் வீட்டிற்கு சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல், சிறப்பு பிரிவு

கே.கே.நகர், : கே.கே.நகரில், போலீஸ் போல் நடித்து, வீட்டை சோதனை செய்வது போல், நகை, பணம் திருடிச் சென்ற ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கே.கே.நகர், 11வது செக்டாரைச் சேர்ந்தவர் பாண்டியன், 45; காஸ் சிலிண்டர் பொருத்துவதற்கான உதிரிபாகங்களை, மொத்தமாக விற்பனை செய்யும் ஏஜன்சி நடத்தி வருகிறார்.கடந்த, 9ம் தேதி, பாண்டியன் வீட்டிற்கு சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல், சிறப்பு பிரிவு போலீசார் என, அறிமுகம் ஆகினர்.பறிமுதல்மேலும், 'பாண்டியன் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. சோதனை செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.வீடு முழுதும் சோதனையிட்ட பின், 'துப்பாக்கி கிடைக்கவில்லை' எனக்கூறி, பாண்டியனின் காரையும் எடுத்துச் சென்றனர்.

அவர்கள் சென்ற பின், பாண்டியன் பீரோவை சோதனை செய்த போது, 42 சவரன் நகை, 12 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். காண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ள உருவத்தையும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண்களையும் ஆய்வு செய்தனர்.இதில், அவர்கள் பயன்படுத்தி இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, அந்த வாகனத்தை பயன்படுத்திய, அசோக் நகர், 1வது தெருவைச் சேர்ந்த சிவா, 25 என்பவரை கைது செய்தனர்.

சிவா அளித்த தகவலின் படி, திருவண்ணாமலையைச் சேர்ந்த சதீஷ், 31, சேலம், எடப்பாடியை சேர்ந்த கார் ஓட்டுனர், அஜித் குமார், 26, திருவொற்றியூரைச் சேர்ந்த ரூபன், 36, ராஜேந்திரன், 50 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, நான்கு கார்கள், ஒரு பைக் மற்றும், ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தேடுதல்விசாரணையில், சிவா, அசோக் பில்லர் அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். அவருக்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ரூபன் மற்றும் சலுான் கடை நடத்தி வரும் ராஜேந்திரன் ஆகியோரின் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள், கடன் தொல்லை காரணமாக கொள்ளையடிக்க திட்டமிட்டு, பெரும் புள்ளிகள் இருந்தால், தகவல் அளிக்கும் படி, சிவாவிடம் கூறி உள்ளனர்.சிவா தன் வீட்டின் அருகே நிறுவனம் நடத்தி வரும் பாண்டியன் குறித்து தகவல் கொடுத்தார். இதையடுத்து, திருவொற்றியூரைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் திட்டம் தீட்ட, போலீஸ் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதில், பூமிநாதன் மீது, செம்பியம், பெரம்பூர், சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கடத்தி பணம் பறித்த வழக்குகள் உள்ளன.பூமிநாதன் போலீஸ் போல் நடித்து, வீட்டில் புகுந்து, பெரும் புள்ளிகளை, அவர்களது காரில் கடத்தி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டவர்.தலைமறைவாக உள்ள பூமிநாதன் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X