விருதுநகர்விருதுநகர் அருகே ஜோகில்பட்டி கிராம மக்களின் சுய சார்பு சிந்தனை, உழைப்பே மூலதனம், தன்னம்பிக்கை, ஒற்றுமை என சொந்த முயற்சியால் அமைக்கப்பட்ட தெப்பக்குளம் மழையால் நிரம்பி மிடுக்காக காட்சியளிக்கிறது.தொன்மையான சிற்பக்கலை, கட்டடக்கலை, கல்வெட்டுக்களை தத்ரூபமாக, உயிரோட்டமாக உருவாக்குவதில் தமிழர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.இந்த வரிசையில் விருதுநகர் - காரியாபட்டி ரோட்டில் உள்ள ஜோகில்பட்டி மையத்தில் உழைப்பை மூலதனமாக கொண்டு இங்குள்ள தெப்பக்குளம் அமைத்துள்ளனர்.
வறண்ட பூமியை வளமாக்கும் பொருட்டு மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் வயல்களில் பாய்ந்து வீணாவதை தடுப்பதற்காக வரத்து கால்வாய்களை அமைத்து சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுத்து தெப்பக்குளத்திற்குள் திருப்பி விட்டனர்.இதன் விளைவு ஆண்டு முழுவதும் தெப்பக்குளம் நிரம்பி மிடுக்காக காட்சியளித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வீடுகள் தோறும் போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கிறது. கோடை காலத்தில் தெப்பத்தின் தண்ணீர் மூலம் கிராமம் குளுமையாகி வருகிறது. நிலத்தடி நீர் சேமிப்புக்கு முன் மாதிரியான கிராமமாக ஜோகில்பட்டி விளங்குகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE